அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடக்கம்: அதிமுக இனி ஓஹோ என வளரும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..!!

சென்னை: அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதிமுக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கி முகாமை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அதிமுகவின் உறுப்பினர்களாக உள்ளவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என கழக சட்ட திட்ட விதிமுறைகள் இருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி கழகத்தின் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று முதல் உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதிமுக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கி முகாமை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கழக உடன் பிறப்புகள் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு 10 ரூபாய் வீதம் தலைமை கழகத்தில் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக ஓஹோ என வளரும்: எடப்பாடி பழனிசாமி

இன்று நல்ல நாளில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ளோம்; இனி அதிமுக ஓஹோ என வளரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று கூறினார். அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு இபிஎஸ் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

Related posts

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி