அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1கோடி மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. போதைப்பொருள் பறிமுதல், கைது தொடர்பாக திமுகவை தொடர்புபடுத்தி பேசியதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதுதொடர்பாக திமுக சார்பாக மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதங்களை முன் வைக்க உள்ளார்.

Related posts

ஜூன் 3: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு