நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலை வீசுகிறது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம்: நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலை வீசுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சேலம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்; அதிமுகவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை வேட்பாளராக நினைத்துக் கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட வேண்டும்.

என்னுடைய இந்த நிலைக்கு எடப்பாடி தொகுதி மக்களாகிய நீங்கள் தான் காரணம். நான் உங்களுக்கு கடமை பட்டு உள்ளேன். எடப்பாடி தொகுதி அதிமுகவின் கோட்டை, யாராலும் கைப்பற்ற முடியாது. இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான்… கட்சி பொதுச்செயலாளர் தான். அதிமுகவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும். தமிழகம் முழுவதும் அதிமுகவிற்கான ஆதரவு அலை வீசி வருகிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலை வீசுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் இவ்வாறு கூறினார்.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து