மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு..!!

சென்னை: மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டார். மேலும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தனிதொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது.

இதனிடையே விருதுநகர், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகளை தேமுதிக.வுக்கு ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்து ஆகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிமுக.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது. வருகிற 22ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அன்றே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் தொலைநோக்கு பார்வையால் வணிகவரி துறையில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய்: தமிழக அரசு தகவல்

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று உச்சபட்ச மின் நுகர்வு பதிவு: மின்சார வாரியம் தகவல்