ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ் பெண்மணி நிகர் ஷாஜியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தனது பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் பதிவிட்டிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டின் மாநில அரசு பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும், தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனை தமிழர்கள் நிரூபித்து கொண்டே இருக்கின்றனர். மேலும், இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி தலைமை பொறுப்பேற்றிருப்பதை பார்த்து அவருடைய குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு அவர் பாராட்டியுள்ளார்.

Related posts

மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் தலைமைச் செயலாளர்

மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி

முள்ளிகிராம்பட்டில் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும்