அடிலெய்டு சாம்பியன்கள்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் லாத்வியா வீராங்கனை யெலனா ஆஸ்டபென்கோ சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியியில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் (26 வயது, 15வது ரேங்க்) நேற்று மோதிய ஆஸ்டபென்கோ (26 வயது, 12வது ரேங்க்) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இங்கிலாந்தின் ஜாக் டிரேப்பருடன் மோதிய செக் குடியரசு வீரர் ஜிரி லெஹக்கா 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸ்திரேலியா) ஜோடி 5-7, 7-5, 9-11 என்ற செட் கணக்கில் ராஜீவ் ராம் (அமெரிக்கா) – ஜோ சாலிஸ்பரி (பிரிட்டன்) ஜோடியிடம் போராடித் தோற்று 2வது இடம் பிடித்தது.

Related posts

கடலாடியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான பெண் ஊழியர் கைது!

உடல் நலம் தேறி வரும் பெண் யானை!