செங்குன்றம்-பிராட்வே வழிதடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

புழல்: செங்குன்றம்-பிராட்வே வழிதடத்தில், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பயணிகள் கோருகின்றனர். செங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து, சென்னை பிராட்வே, கிண்டி வரை மாநகர பேருந்துகள்(தடம் எண் 242, 113), புழல், கதிர்வேடு, பாலாஜி நகர், விநாயகபுரம், கல்பாளையம், ரெட்டேரி, லட்சுமிபுரம் வழியாக சென்று வருகின்றன. இந்த வழிதடத்தில் குறைவான பேருந்து இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த பகுதி வழியாக கூடுதல் பேருந்துகளை இயக்கவும், கதிர்வேடு, பாலாஜி நகர், லட்சுமிபுரம், ரெட்டேரி ஆகிய பேருந்து நிறுத்தங்களில் இரண்டு பக்கங்களிலும் நிழற்குடைகள் இல்லாததால் பயணிகள் வெயிலில் நின்றவாறு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட இடங்களில் சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டல அதிகாரிகள் மற்றும் மாதவரம் போக்குவரத்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்து இயக்கவும், நிழற்குடைகள் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

வாணியம்பாடியில் கேன்டீன் ஊழியரை தாக்கிய போதை கும்பல்: ஆத்திரமடைந்த தியேட்டர் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இளைஞர்களை தாக்கிய காட்சி வெளியீடு

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த புகாரில் எச்.ராஜா மீது பதிவான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!!

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த புகாரில் எச்.ராஜா மீது பதிவான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு