‘ஒரே ஊரில் தனித்தனியாக கூட்டம் நடத்துவோம்’ யாருக்கு அதிக ரசிகர்கள் என பார்த்து விடலாம்: பவன்கல்யாணுக்கு நடிகை ரோஜா சவால்

 

திருமலை: ஆந்திராவில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதையொட்டி நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன்கல்யாண் கடந்த 2 வாரங்களாக வாராகி யாத்திரா’ என்ற ெபயரில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை யாருடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக அவர் தெரிவிக்காமல் தனித்து தேர்தல் களம் காண்பதுபோல் பேசி வருகிறார்.

அவரது பேச்சில் முழுக்க முழுக்க ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் முதல்வர் ஜெகன்மோகனை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது கட்சி பொதுக்கூட்டத்திற்கு அதிகளவில் மக்கள் பங்கேற்று வருகின்றனர். பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் வருவதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் வரும் தேர்தலில் ஜெகன்மோகனை பின்னுக்கு தள்ளிவிட்டு பவன்கல்யாண் முன்னிலை பெற வாய்ப்புள்ளது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் ஆந்திர சுற்றுலா துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா கூறுகையில், `பவன் கல்யாண் ஒரு நடிகர். நடிகர் என்ற ரீதியில் அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் வருகிறது. இதெல்லாம் வாக்குகளாக மாறிவிடும் என அவர் நினைத்து விடக்கூடாது. நானும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறேன். எனக்கும் அதிகளவில் மக்கள் கூட்டம் கூடுகிறது. வேண்டுமென்றால் ஒரு சவால் விடுகிறேன். ஏதாவது ஒரு ஊரில் தனித்தனியாக கூட்டம் நடத்தலாம். நானும் வருகிறேன், அவரும் (பவன்கல்யாண்) வரட்டும். யாரை பார்க்க அதிகளவில் ரசிகர்கள் வருகிறார்கள் என பார்த்து விடலாம். அவரை விட எனக்குத்தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்