குற்றவாளியை வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பு கொடுத்த ஏட்டு டிஸ்மிஸ்

திருப்பூர்: திருப்பூர் அடுத்த அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் ஜெகநாதன். இவர் கடந்த 2021ம் ஆண்டு அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த வாசுகுமார் என்பவரை, தனது வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பு அளித்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து திருப்பூர் மாவட்ட எஸ்பிக்கு புகார் சென்றுள்ளது. மாவட்ட எஸ்பி சசாங் சாய் விசாரணை நடத்தி, காவல்துறைக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் அதிகபட்ச தண்டனையாக ஏட்டு ஜெகநாதனை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு