சொத்து குவிப்பு வழக்கு; சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை: அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ₹35.79 கோடி சொத்து சேர்த்ததால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் மீது வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி பெறவில்லை என விஜயபாஸ்கர் தரப்பு வக்கீல்கள் வாதிட்டு, எழுத்துப்பூர்வமாக மனு தாக்கல் செய்தனர். சட்டப்பேரவைத் தலைவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் ஹேமந்த் தெரிவித்தார். இதையடுத்து அரசுத் தரப்பில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கக் கூறி, வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு நீதிபதி பூரண ஜெய ஆனந்த் ஒத்திவைத்தார்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு