கார் விபத்தில் புதுவை மருத்துவ கல்லூரி டீன் பலி

பெரம்பலூர்: திண்டுக்கல் லட்சுமி சுந்தரம் காலனியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் ஸ்ரீதர் (34). இவர் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு மையத்தில் டீனாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஸ்ரீதர் காரில் சென்றார். காரை அவரே ஓட்டி சென்றுள்ளார். இரவு 11 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலம் அருகேயுள்ள கார் சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீதர் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின் கம்பத்தில் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது சேதமடைந்தது. இதில் இடிபாட்டில் சிக்கி தர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்