அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்தவர் உயிரிழப்பு

விழுப்புரம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஜூபின்பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்புஜோதி என்ற பெயரில் அனுமதியின்றி ஆசிரமத்தை நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில் பெண்கள் பலருக்கு பாலியல் தொந்தரவு, 20க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்த அருள்மணி (48) என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி 9ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 4ம் தேதி முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

ஆர்எஸ்எஸ் உடனான மோதலுக்கு மத்தியில் ஓபிசி, தலித், பெண் தலைவர்களை தேடும் பாஜக: மகாராஷ்டிரா, அரியானா தேர்தலுக்கு முன் நியமிக்க முடிவு

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு