பூந்தமல்லியில் இருந்து இந்தோனேஷியாவுக்கு தேனிலவு சென்ற டாக்டர் தம்பதி கடலில் மூழ்கி பலி: போட்டோ ஷூட் நடத்தியபோது சோகம்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே புதுமண டாக்டர் தம்பதி, தேனிலவுக்காக இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்தபோது, நீரில் மூழ்கி இறந்தனர். பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் விபூஷ்ணியா (25), அதே பகுதியில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் டாக்டர் லோகேஸ்வரன் (27) என்பவருக்கும் கடந்த 1ம் தேதி இருவீட்டாரின் சம்மதத்துடன் பூந்தமல்லியில் நடந்தது. இதைத் தொடர்ந்து, புதுமண தம்பதியர், தேனிலவை கொண்டாட பாலித்தீவு மற்றும் இந்தோனேஷியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு சென்றனர். இந்தோனேஷியாவில் தங்கியிருந்தபோது, அங்குள்ள கடல் பகுதிக்குள் விசைப்படகில் சென்று, போட்டோ ஷூட் நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது நிலைதடுமாறி கடலில் விழுந்து தத்தளித்தனர். சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக நேற்று மாலை பூந்தமல்லியில் வசிக்கும் பெண் வீட்டாருக்கு தகவல் கிடைத்தது. மேலும், லோகேஸ்வரனின் சடலத்தை மீட்டு விட்டதாகவும், விபூஷ்னியாவின் உடலை போலீசார் தேடி வருவதாகவும் நேற்றிரவு இந்தோனேஷியாவில் இருந்து பெண் வீட்டாருக்கு கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து புதுமண தம்பதிகளின் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். இதுபற்றி ஒன்றிய-மாநில அரசுக்கு இந்தோனேஷிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களது உடல்களை சென்னைக்கு கொண்டுவர ஒன்றிய-மாநில உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் சென்னீர்குப்பம் பகுதியில் இன்று மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது

மே-03: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!

போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்