நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு


நித்திரவிளை: குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன் துறை பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (50), அதே பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் (45). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலை பைபர் படகு ஒன்றில் தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகின் உள்பகுதி தீப்பற்றி எரிய துவங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் 2 பேரும் உடனடியாக கடலில் குதித்து தத்தளித்துகொண்டிருந்தனர்.

அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் படகில் சென்று கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2 பேரையும் மீட்டனர். தொடர்ந்து தீ எரிந்ததால் படகின் பெரும்பாலான பகுதி சேதமடைந்தது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து குளச்சல் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கமல்ஹாசன் வாழ்த்து

நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது: கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு