9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை குடியாத்தம் அருகே

குடியாத்தம், மே 27: குடியாத்தம் அருகே 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு கடந்த சில தினங்களாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். அதன்படி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி, மருத்துவ துறையினர் வேலூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனர். அதன்படி அதிகாரி ரஞ்சித் விசாரணை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சிறுமியை ஏமாற்றி ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் கொடுத்த புகாரின்பேரில், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தேடி வருகிறார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்