85 வயது மேற்பட்டோர், வீட்டிற்கு சென்று தபால் வாக்கு சேகரிக்கும் பணி துவக்கம்

 

தஞ்சாவூர், ஏப்.6:தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டிற்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக சென்று தபால் வாக்குகள் சேகரித்து பணி நேற்று தொடங்கியது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் அவர்களது வீட்டிற்கு நேரடி சென்று தபால் வாக்குகள் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

அதன்படி தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் 383 பேர் முதியவர்கள், மாற்றுதிறனாளி வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21,421 பேர் உள்ளனர். அதில் 2446 பேர் தபால் வாக்குக்கு படிவம் வழங்கியுள்ளனர். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் 12,294 பேர்களில் 5,067 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று தபால் வாக்கு வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் வாக்கு சேகரிக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் நேற்று கணபதி நகர் பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு நேரடியாக சென்று தபால் வாக்கு சேகரித்து வருகின்றனர்.இக்குழுவில் மண்டல அலுவலர், மைக்ரோ அப்சர்வர், காவலர் ஒருவர், வீடியோகிராபர், அரசியல் ஏஜென்ட் இடம் பெற்றுள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்