80வது பிறந்தநாள்: இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, கமலஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்துக்கு சென்று அவருக்கு வாழ்த்து கூறினார். தனது இல்லத்திற்கு வந்த முதலமைச்சரை பொன்னாடை போர்த்தி இளையராஜா வரவேற்றார். இளையராஜாவுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி உடன் இருந்தனர். அவர்களும் தங்கள் வாழ்த்துகளை இளையராஜாவுக்கு தெரிவித்தனர். ஏராளமான ரசிகர்களும் வரிசையில் காத்திருந்து இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்சி செய்து வரும் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, 5 முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார். தற்போது 80 வயதாகும் இளையராஜாவுக்கு கடந்த 2010ம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. அதன் பின் 2018-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Related posts

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் குடிநீர் பஞ்சத்தால் நலியும் கிராமங்கள்: ஆபத்தான கிணறுகளில் தண்ணீர் சேகரித்து அல்லலுறும் பெண்கள்

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு