7ம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தகவல்

அமெரிக்கா: ஏழாம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போன, 7ம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோயில் உள்ள முருகன் சிலை, அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திடம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

’தடயம்’ என்ற பத்திரிகையில் முருகன் சிலை தொடர்பான புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில் முருகன் சிலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்த அடிப்படையில், ஒன்றிய அரசு முருகன் சிலையைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு