6 மாவட்டங்களுக்கு 2,630 டன் யூரியா காட்பாடி ரயிலில் நிலையத்தில் இருந்து பிரித்து அனுப்பி வைப்புதட்டுபாடு இன்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைவேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட

வேலூர், ஏப்.7: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 6 மாவட்டங்களுக்கு யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் 2,630 டன் யூரியா காட்பாடிக்கு ரயிலில் நேற்று வந்தது. இவை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக உரம், பூச்சி மருந்துகள், அடி உரம், தெளிப்பு மருந்துகள் போன்றவை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலமாக அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், சென்னை, தூத்துக்குடி நகரங்களில் இருந்து யூரியா, டிஏபி உரங்கள் சரக்கு ரயில்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த உரங்கள் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கூட்டுறவு உரக்கிடங்குகள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் 2,630 டன் யூரியா நேற்று ரயிலில் காட்பாடிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உரமூட்டைகள் லாரிகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘காட்பாடி ரயில் நிலையத்திற்கு மொத்தம் 2,630 டன் யூரியா உரம் ரயிலில் வந்தது. இவை அனைத்தும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 650 டன்னும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 1,150 டன்னும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 600 டன்னும், திருவள்ளூர் 230 டன் என மொத்தம் 2,630 டன் யூரியா லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக்கடைகளில் பெற்றுகொள்ளலாம்’ என்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை