52 மனுக்களுக்கு உடனடி தீர்வு

திருச்சி, மே 5: முதல்வர் தனிப்பிரிவில் பெறப்பட்ட திருச்சி மாவட்ட போலீஸ் துறை தொடர்பான பொதுமக்களின் 52 மனுக்களுக்கு மாவட்ட எஸ்பி குறைதீர்ப்பு கூட்டத்தில் உடனடி தீர்வு பெறப்பட்டது. பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகள் தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களாக பெறப்பட்டு, அவை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு தீர்வு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த திருச்சி மாவட்டம் தொடர்பான போலீஸ் துறை சம்பந்தப்பட்ட 71 மனுக்கள் மாவட்ட எஸ்பி சுஜித்குமார் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த மனுக்களுக்கு தீர்வு காணும் குறைதீர் கூட்டம் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்திலுள்ள போலீஸ் துறைக்கு சொந்தமான திருமாங்கல்ய மஹாலில் நேற்று நடந்தது. இந்த முகாமுக்கு எஸ்பி சுஜித்குமார் தலைமை வகித்தார். கூடுதல் போலீஸ் எஸ்பிக்கள், துணை போலீஸ் எஸ்பிக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டு நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில் 52 மனுக்களுக்கு உடனடி தீர்வு பெறப்பட்டது. 19 மனுக்கள் மேல்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றின் மீதும் விரைவாக தீர்வு பெறப்படும் என எஸ்பி சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்