திருச்சி விமான நிலையத்தில் ஷூவில் மறைத்து கடத்தி வந்த ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்துக்கு ஷூவில் மறைத்து கடத்திவரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர் அணிந்திருந்த ஷூவில் உலோகம் இருந்ததை ஸ்கேன் கருவி மூலம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து தீவிர விசாரணை நடத்தியபோது ஷூ வுக்குள் பசை தடவி அதில் 797.500 கிராம் தங்கத்தை ஒட்டி வைத்து பயணி கடத்தி வந்தது தெரியவந்தது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்தனர்.

 

Related posts

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்