4-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.!

டெல்லி: 84-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தான் எதைப்பற்றி பேச வேண்டும்? என நாட்டு மக்களிடம் அவர் அடிக்கடி யோசனையும் கேட்டு வருகிறார். இந்நிலையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை காலை 11 மணிக்கு நடக்க இருக்கிறது. இதில் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்ற உள்ளார். இது 84-வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில் இன்ஜின் டிரைவர்கள்: ரயில்வே வாரியம் ஆலோசனை

`வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: போலீசார் அகாடமியில் நெகிழ்ச்சி

எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு விவாதம் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியம்தான்: மீண்டும் சர்ச்சை கிளப்பும் அரசியல் கட்சிகள்