4 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்

பள்ளிபாளையம், நவ.26: பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆனங்கூர் ஊராட்சி, நல்லாகவுண்டம்பாளையம் பகத்சிங் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டின் முன்பு, ஆடுகளை மேய்சலுக்கு விட்டிருந்தார். திடீரென ஆடுகள் கத்திக்கொண்டு ஓடின. சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது, அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறின. நாய்களை விரட்டியடித்த போதிலும், 4 ஆடுகளை நாய்கள் கடித்ததால் இறந்தன. இந்த பகுதியில், கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகள், இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். பகல் இரவு பாராமல் நாய்கள் கூட்டமாக சுற்றுவதும், கால்நடைகளை கடித்து குதறுவதும் அடிக்கடி நடப்பதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். கால்நடைத்துறை மூலம் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை