தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன


சிங்கப்பூர்: தென் சீனக் கடலில் படைகளை நிலைநிறுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 3 நாள் பயணமாக இந்திய கடற்படையின் 3 போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றுள்ளன. தென் சீன கடல் பகுதியை ஒட்டுமொத்தமாக சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அதில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகள் உரிமை கோருகின்றன. தற்போது, தென் சீன கடலில் அமெரிக்கா ஆதரவுடன் பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்களும், சீன கடற்படை கப்பல்களும் நேருக்கு நேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் போர் படைகளை நிலைநிறுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய கடற்படையின் டெல்லி, சக்தி, கில்தன் ஆகிய 3 போர் கப்பல்கள் 3 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளன. அங்கு சாங்கி கடற்படைத் தளத்தை அடைந்த இந்திய கப்பல்களுக்கு சிங்கப்பூர் கடற்படை வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தும் என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டையே உலுக்கிய ஆபாச வீடியோ விவகாரம் :நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவில் கால் வைக்கும் பிரஜ்வல் ரேவண்ணா!!

ஈஷா அறக்கட்டளை சார்பில் மின்தகன மேடை அமைப்பதை எதிர்த்து வழக்கு..!!

மானூரில் மின் கசிவால் இசேவை மையம், ஓட்டல், பழக்கடையில் தீவிபத்து