இந்தியப் பெருங்கடலில் சீன படகு மூழ்கி 39 பேர் பலி

பீஜிங்: சீனாவின் அரசு சார்பு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்தியப் பெருங்கடலில் சீனாவின் மீன்பிடி படகு மூழ்கியது. அதில் பயணம் செய்த 39 பணியாளர்களை காணவில்லை. பணியாளர்கள் குழுவில் இருந்த சீனாவைச் சேர்ந்த 17 பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 17 பேரும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 5 பேரும் அடங்குவர்.

அவர்கள் கடலில் மூழ்கியிருக்க வாய்ப்புள்ளதால், படகையும் உயிர் பிழைத்தவர்களையும் தேடுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கியாங் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு; கல்வித்துறையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு: அரசு பெருமிதம்

திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? : கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி