கோடை சீசன் நெருங்கியது: 35 ஆயிரம் தொட்டியில் மலர் நாற்றுகள் பராமரிப்பு


ஊட்டி: கோடை சீசன் நெருங்கிய நிலையில் 35 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுக்களை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் ேம மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. 5 நாட்கள் வரை நடக்கும் இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இம்முறை மே மாதம் 17ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை 6 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவுள்ள கோடை சீசனுக்காக தற்போது தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முராக நடந்து வருகிறது. பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுக்களை பராமரிக்கும் பணிகளில் நாள்தோறும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், 35 ஆயிரம் தொட்டிகளில் நடவு பணிகள் முடிந்த நிலையில் நாள்தோறும் இந்த மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்சும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உரமிட்டு பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். பனியின் தாக்கம் குறைந்தால், மலர் செடிகளுக்கு பாதுகாப்பாக தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றப்பட்டு வருகிறது. பெரும்பாலான மலர் செடிகளில் தற்போது மொட்டுக்கள் காணப்படுவதால் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெரும்பாலான செடிகளில் மலர்களை காண முடியும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

Related posts

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல பதிவு செய்த அனைவரும் இ-பாஸ் பெற்றுள்ளனர்: தமிழ்நாடு அரசின் எளிமையான நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டு

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி 10ஆக உயர்வு

நடு வழியில் திடீர் பிரேக் டவுன்; 3 மணிநேரம் போக்குவரத்தை திணறடித்த அரசு பஸ்: மார்த்தாண்டம் ஜங்சன் பகுதியில் அணிவகுத்த வாகனங்கள்