கோவில்பட்டி பகுதியில் சூறைக்காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் வீசிய சூறைக்காற்றுக்கு 3 ஆயிரம் வாழைகள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. அப்போது வீசிய பலத்த சூறைக்காற்றுக்கு கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வாழைகள் முறிந்து சேதமடைந்தன.

குலை தள்ளி நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழைகள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். சூறாவளி காற்றில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் சேதமடைந்த வாழைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழைகள் சேதம் அடைந்துள்ளது கவலை அடையச் செய்துள்ளதாகவும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

தமிழகத்தில் காலாவதியான 26 சுங்க சாவடிகளை உடனே மூட வேண்டும்: முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம்

பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடு பலியிட தடையில்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு