திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம்: தனியார் பேருந்தும், லாரியும் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும்- லாரியும் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து கம்பம் நோக்கி 34 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து திருச்சி சஞ்சீவி நகர் அருகே வந்துக்கொண்டிருந்த போது முன்னால் சென்ற செங்கல் லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது.

இவ்விபத்தில்,பேருந்து ஓட்டுனரான சந்திரன் மற்றும் பேரனுடன் பயணித்த மூதாட்டி பழனியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடர்பாடுகளுக்குள் சிக்கி சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் முடங்கியது. பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போலீசார், ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீர் செய்தனர்.

விபத்து குறித்து திருச்சி கோட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பாஜக கூட்டணியில் குழப்பம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டி?

ஒடிசா, ஆந்திரா மாநில முதலமைச்சர்கள் இன்று பதவியேற்பு

தேர்தல் தோல்வி, தமிழ்நாடு பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்: அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்