உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை

கம்பாலா: உகாண்டாவில் 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொல்லப்பட்டனர். உகாண்டாவின் மேற்கு மாகாணத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அதிகளவிலான வனவிலங்குகளுக்கு புகலிடமாக விளங்கி வருகிறது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் இந்த பூங்காவுக்கு வருகை தருவார்கள். இந்நிலையில் ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் விலங்குகளை காண சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர், அந்த சுற்றுலா வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பின்னர் அந்த வாகனத்தை தீவைத்து கொளுத்தி விட்டு தப்பினர். இந்த சம்பவத்தில் 2 வெளிநாடு பயணிகள் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற உள்ளூர் வழிகாட்டி ஒருவரும் கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு அந்நாட்டின் அதிபர் யோவேரி முசவேனி கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related posts

விருப்ப ஓய்வு பெற மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்

பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84% குப்பை அகற்றம்: அடுத்த மாதம் பணிகளை முடிக்க மாநகராட்சி திட்டம்

தாம்பரம் பகுதிகளில் தொடரும் மின்வெட்டு: இரவில் விடியவிடிய மக்கள் அவதி