2300 மூட்டை பருத்தி ₹55 லட்சத்திற்கு ஏலம்

இடைப்பாடி, ஜன.7: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2,300 மூட்டை பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். பிடி ரகம் குவின்டால் ₹6,069 முதல் ₹7,319 வரையும், கொட்டு ரகம் ₹3,169 முதல் ₹4809 வரையும் ஏலம் போனது. மொத்தம் 2300 மூட்டை பருத்தி, ₹55 லட்சத்திற்கு ஏலம் போனது. விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்