கரிவலம்வந்தநல்லூர் அருகே கொய்யாபழத்தில் வைக்கப்பட்ட வெடியைக் கடித்து 2 ஆடுகள் பலி

சங்கரன்கோவில் : கரிவலம்வந்தநல்லூர் அருகே கொய்யாபழத்தில் வைக்கப்பட்ட வெடியைக் கடித்து 2 ஆடுகள் பலியானது.கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள ஒப்பனையாள்புரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேலு மகன் முருகன் (54). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவர் தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டு கரிவலம்வந்தநல்லூர் பெரியகுளம் கண்மாயில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 ஆடுகள் அங்கிருந்த கொய்யா பழத்தைக் சாப்பிட்டது.

இந்நிலையில் கொய்யாப்பழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி திடீரென்று வெடித்து சிதறியதில் இரண்டு ஆடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முருகன் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மேலும் அப்பகுதியில் வெடிகுண்டுகள் உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்