மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி


மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் தெற்கு பகுதி ஓக்சாகா மாநிலத்தில் உள்ள டெபிள்மீமெ நகர் பகுதிக்குள் ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக சுமார் 50 பேர் இருந்ததாக தெரிகிறது. அப்பகுதியில் குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பயந்து பேருந்து வேகமாக இயக்கப்பட்டது. அப்போது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பேருந்தில் இருந்த 2 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 16 பேர் இறந்தனர். 29 பேர் படுகாயமடைந்தனர்.

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்