150 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று காதலிக்கு தாலி கட்டிய சாப்ட்வேர் இன்ஜினியர்

திருவனந்தபுரம்: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்ராமன்-ஜோதிமணி தம்பதியின் மகன் சிவசூர்யா. அகமதாபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணி புரியும் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சத்யன் மகள் அஞ்சனாவுடன் காதல் மலர்ந்தது. 2 வருடமாக 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.காதலுக்கு 2 வீட்டினரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி நேற்று குருவாயூர் கோயிலில் வைத்து 2 பேருக்கும் வெகு விமரிசையாக திருமணம் நடந்தது. திருமணத்திற்காக மணமகன் சிவசூர்யா கோவையில் இருந்து காரில் வருவார் என்று மணமகள் வீட்டினர் கருதினர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் மணமகன் சிவசூர்யா நண்பர்களுடன் குருவாயூருக்கு சைக்கிளில் வந்து இறங்கினார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கோவையிலிருந்து 5 நண்பர்களுடன் சனிக்கிழமை காலை சைக்கிளில் புறப்பட்ட சிவசூர்யா 150 கிமீ பயணம் செய்து மாலையில் குருவாயூரை அடைந்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக புதுமையாக சைக்கிளில் சென்றதாக அவர் கூறினார்.தனது சைக்கிளில் ‘ரைடு டூ மேரேஜ்’ என்ற சிறிய போஸ்டரையும் வைத்திருந்தார். தாலி கட்டி முடித்த பிறகு அதேபோல திரும்பி கோவைக்கு சைக்கிளிலேயே செல்ல சிவசூர்யா தீர்மானித்திருந்தார். அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி தனது பயண திட்டத்தை மாற்றி குருவாயூரிலிருந்து மணமகள் அஞ்சனாவுடன் சிவசூர்யா கோவைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்….

Related posts

மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்

நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்த 11 பேரின் வீடுகள் இடிப்பு