13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வடமாநில வாலிபர் போக்சோவில் கைது

திருப்பூர், ஏப்.4: மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சர்சாத் (21). இவர் திருப்பூர் நல்லூரை அடுத்த ராஜீவ் காந்தி நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் 13 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்ெகாண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சர்சாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை