8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்..!!

சென்னை: அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், இந்திய கம்யூ., மதிமுக, மமக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டமன்ற தேர்வு குழுவுக்கு சட்ட மசோதாவை அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் வலியுறுத்தினார். தொழிலாளர்களுக்கு எதிரான இந்த சட்டமுன்வடிவை கடுமையாக எதிர்க்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ., எம்எல்ஏ நாகை மாலி கூறினார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவை தமிழக அரசு சட்ட முன்வடிவாக எடுக்கக்கூடாது. தொழிலாளர்களுக்கு எதிரான சட்டமுன்வடிவு என காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்தார். தொழிற்சாலைகளை பாதுகாக்கும் அதேநேரத்தில் தொழிலாளர் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது.

Related posts

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு

பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 விமானப்படை வீரர்கள் காயம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது