10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவியரில் சிலர் மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கான பட்டியல் இன்று மதியம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் அதில் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகள் மதிப்பெண் மாற்றங்களுடன் மேற்கண்ட இணைய தளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து மேற்கண்ட பட்டியலில் இடம் பெறாத மாணவ, மாணவியரின் விடைத்தாளில் மதிப்பெண்களில் எந்த மாற்றமும் இல்லை.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொள்கைக் கூட்டணிக்கு 40/40 தொகுதியிலும் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்: அமைச்சர் உதயநிதி

இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை பொதுமக்கள் வழங்கவில்லை: தேர்தல் முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா