காஞ்சிபுரம் அருகே நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் 108 கோ பூஜை


காஞ்சிபுரம்: உக்கம் பெரும்பாக்கம் ஸ்ரீநட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் நடந்த 108 கோபூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீநட்சத்திர விருட்ச விநாயகர் கோயில் உள்ளது. இங்கு, 27 நட்சத்திர தேவதைகளுக்கு கற்சிலைகள் அமைக்கப்பட்டு அதற்குரிய நட்சத்திர விருட்ச மரங்களும் அமைந்துள்ளது. வருடம்தோறும் பொங்கல் பண்டிகையின்போது 108 கோ பூஜை விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்நிலையில் நேற்று உலக நண்மை கருதியும் குடும்ப நன்மை இல்லத்தில் பெருகவேண்டியும், சகல ஐஸ்வர்யங்களும் பெறும்வகையில் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கவேண்டி 108 கோ பூஜை நடத்தப்பட்டது.

காலையில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு பசுவிற்கு பூஜை செய்து தீபாராதனை காண்பித்து குடும்பத்துடன் வழிபட்டனர். இதையடுத்து, அரசு, வேம்பு உள்ளிட்ட விருட்சங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்