100 பேப்பர் ஸ்பான்சர கோவை எல்இஎப் ஆலயத்தில் 3 நாள் எழுப்புதல் கூட்டம்

கோவை. ஜன.24: கோவை காந்திபுரம் அடுத்துள்ள நூறு அடி ரோடு ஜிபி தியேட்டர் பின்புறம் உள்ள இலெமன்ஸ் இவான்ஜிசிக்கல் பெல்லோஷிப் ஆலயத்தில் ‘3 நாள் எழுப்புதல் கூட்டங்கள்’ என்ற தலைப்பில் கிறிஸ்தவ நற்செய்தி கூட்டம் நடைபெறுகிறது. வருகிற 26ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 26,27,28 ஆகிய 3 நாட்கள் தினமும் காலை மற்றும் மாலை 6 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி மாலை 5.30 மணிக்கும் நடைபெறுகின்றது. இதில் சிறப்பு செய்தியாளர்களாக பெங்களூருவை சேர்ந்த சுவிசேஷகர் காலேப் தானியேல் மற்றும் அண்ணாமலை நகரை சேர்ந்த சுவிசேஷகர் ஸ்டீபன் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் தலைமை போதகர் டாக்டர் ஜோசுவா ஜேசுதாஸ் மற்றும் சபை மக்கள் செய்து வருகின்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு