மணக்கால் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா நாளை தொடக்கம்

நித்திரவிளை, ஜன.24: நித்திரவிளை அருகே மணக்கால் சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்கி பிப்ரவரி 3ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, மதியம் பூஜை, அன்னதானம், மாலை பஜனை, பூஜை, தீபாராதனையும், இரவு புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, சுவாமி எழுந்தருளுதலும் தீபாராதனையும் நடக்கிறது. சிறப்பு நிகழ்வுகளாக முதல் நாள் மாலை திருவிளக்கு பூஜை, இரவு சமய மாநாடு, 2ம் நாள் காலை பண்பாட்டு போட்டி மற்றும் ஒப்புவித்தல் போட்டி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 3ம் நாள் மாலை திருவிளக்கு பூஜை, இரவு மகளிர் மாநாடு, 4ம் நாள் காலை பாட்டுப் போட்டி, பேச்சு போட்டி, இரவு சமய மாநாடு, 6ம் நாள் இரவு சமய மாநாடு, 9ம் நாள் காலை நாதஸ்வர கச்சேரி, மதியம் சுவாமி பவனி வருதல், இரவு இன்னிசை, சிங்காரி மேள கச்சேரி ,பத்தாம் நாள் காலை ஆறாட்டு ஆகியவை நடக்கிறது.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது