100 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை ரேஷன் கடையை திறந்து அமைச்சர் துரைமுருகன் பேச்சு காட்பாடியில் பெல் நிறுவனம் எதிரே

வேலூர்: காட்பாடியில் பெல் நிறுவனம் எதிரே 100 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக ரேஷன் கடை திறப்பு விழாவில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். காட்பாடி ஓடைப்பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் பகுதியில்ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா நேற்று நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். எம்பி கதிர்ஆனந்த், துணைமேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா வரவேற்றார்.

இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தொகுதி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த தொகுதி நிதியை அரசு சார்பில் செயல்படுத்தப்படாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். பஸ்சுக்காக பொதுமக்கள் வெயில், மழையில் காத்துக்கிடக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை சுத்தமாகவும், கோயில் போல வைத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் குடிகாரர்கள் ஆக்கிரமிப்பு செய்யாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.

தொடர்ந்து காட்பாடி 4வது வார்டு செங்குட்டை பேங்க் காலனியில்ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ேரஷன் கடையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து பேசியதாவது: இப்பகுதி மக்கள் கோரிக்கை ஏற்றுரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ேரஷன் கடை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. செங்குட்டை மக்கள் வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன். முன்பு ரேஷன் கடை அரிசியை கோழி கூட சாப்பிடாது என்பார்கள். ஆனால் இப்போது அரிசி அனைத்தும் அற்புதமாக உள்ளது என எதிர்கட்சி உறுப்பினர்களே பாராட்டுகிறார்கள்.

தனியார் விற்பனை செய்யும் பொருட்கள்தான் நன்றாக இருக்கும் என்ற நிலைமாறி ரேஷன் பொருட்களும் நன்றாக இருக்கிறது என வாங்கிச்செல்கிறார்கள். இந்த தொகுதி மக்களுக்கு நிறைய திட்டங்கள் செய்துள்ளேன். குறிப்பாக உப்பு தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த மக்களுக்கு பாலாற்று குடிநீர் கொண்டு வந்தேன். ரயில்வே பாலம் பெரிதுபடுத்தப்பட்டது. அடுத்ததாக மேலும் ஒரு ரயில்வே மேம்பாலம் கட்ட எம்பி மூலம் நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது 200 படுக்கை கொண்ட அரசு மருத்துவமனையும், அரசுக்கல்லூரி ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளது. காட்பாடி சித்தூர் ரோட்டில் உள்ள டெல் கம்பெனி மூடப்பட்டது. இந்த கம்பெனியை பெல் கம்பெனியாக மாற்றப்பட்டுள்ளது. அதன் எதிரே 100 ஏக்கர் கொண்ட சிப்காட் தொழிற்சாலையாக அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் காட்பாடி தொகுதியில் உள்ளவர்களுக்குதான் பணி வழங்கவேண்டும் என நான் தொழில்துறை அமைச்சரிடம் கூறியுள்ளேன். ஐடி பார்க் அமைக்கப்படுகிறது. 24 மணி நேரம் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் குடிநீர் திட்ட பணிகளை முறையாக செயல்படுத்தாமல் பில் போட்டு ஏமாற்றிவிட்டனர்.

இவை தற்போது நிவர்த்தி செய்துவிட்டு பணிகள் நடந்து வருகிறது. காட்பாடியில் கூடுதலாக ஒரு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். மேலும் விருதம்பட்டு, திருவலத்திற்கு என தனித்தனியாக இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் எம்பி கதிர்ஆனந்த், துணைமேயர் சுனில்குமார், மண்டல குழுதலைவர் புஷ்பலதா வன்னியராஜா, ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், கவுன்சிலர்கள் சித்ரா லோகநாதன், அன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை