₹3.80 லட்சம் மதிப்புள்ள பைக்குகள் பறிமுதல் காட்பாடியை சேர்ந்த 4 பேர் கைது ஆந்திராவில் திருடிய

வேலூர், ஏப்.16: ஆந்திராவில் ₹3.80 லட்சம் மதிப்புள்ள பைக்குகளை திருடிய காட்பாடி பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரங்கணேஷ் என்பவருக்கு சொந்தமான புல்லட், பூதலப்பட்டை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரின் பைக் கடந்த 12ம்தேதி இரவு திருட்டு போனது. இதுதொடர்பான புகாரின்பேரில் பூதலப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 14ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பூதலப்பட்டு அடுத்த கடப்பா-சித்தூர் சாலை சந்திப்பில் பூதப்பட்டு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரே பைக்கில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கல் அடுத்த சிங்காரெட்டியூரை சேர்ந்த சந்தோஷ்குமார்(30), காட்பாடி அடுத்த கரசமங்கலத்ைத சேர்ந்த சக்திவேல்(21), காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூரை சேர்ந்த பாலாஜி(23), காட்பாடி பள்ளிக்குப்பத்தை சேர்ந்த பி.தினேஷ்(19) என்பது தெரிய வந்தது.

இவர்கள் கடந்த 13ம்தேதி திருப்பதி மாவட்டம் பாகாலாவில் புல்லட்டை திருடிக்கொண்டு அதை விற்பதற்காக வேலூர் வந்து கொண்டிருந்ததாக தெரிய வந்தது. மேலும் அவர்கள் கடந்த 13ம்தேதி பூதலப்பட்டு மற்றும் முருக்கம்பட்டு பகுதிகளில் புல்லட் மற்றும் பைக் ஆகியவற்றை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கரசமங்கலம் வந்த பூதலப்பட்டு போலீசார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் மற்றும் அவர்கள் திருடிக் கொண்டு வந்த ஒரு பைக் என மூன்று பைக்குகளை கைப்பற்றினர். இதன் மதிப்பு ₹3 லட்சத்து 80 ஆயிரமாகும். மேலும் பிடிப்பட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரசமங்கலத்தில் நேற்று முன்தினம் மாலை திடீரென சித்தூர் டிஎஸ்பி தலைமையில் 5க்கும் மேற்பட்ட போலீசார் குற்றவாளிகளுடன் வந்து பைக்குகளை கைப்பற்றி எடுத்துச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை