₹14.31 லட்சம் காணிக்கை

சேலம், ஏப்.25: சேலம் சுகவனேஸ்வரர் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தேர்நிலையம் பகுதியில் உள்ளது. இக்கோயிலில் நான்கு நிரந்தர உண்டியல் உள்ளது. இந்த உண்டியல்களில் நேற்றுமுன்தினம் காணிக்கை நிரம்பியது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை தர்மபுரி உதவி ஆணையர் உதயகுமார், சுகவனேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் ராஜா ஆகியோர் தலைமையில் உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டது. உண்டியல்களில் ₹14 லட்சத்து 31 ஆயிரத்து 441, தங்கம் 11 கிராம், வெள்ளி 135 கிராம் காணிக்கையாக இருந்தது.

Related posts

முசிறி, தொட்டியத்தில் நியாய விலை கடையில் குறைதீர் முகாம்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

திருச்சியில் கோயில் உண்டியலை உடைத்து நகை திருட்டு