ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டம்

 

ராமநாதபுரம். பிப். 25: ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் முன்னாள் மண்டல செயலாளர் முகமது யாசின் முன்னிலை வகித்தார். ஆதித்தமிழர்கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் வரவேற்றார்.

கூட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோன்றுவதற்கு சுற்றுச்சூழல் அலுவலகத்தில் அனுமதி கோரி உள்ளது. இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் குருதிவேல் மாறன் நன்றி கூறினார்.இதில் பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை