ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா

கோவை, மார்ச் 28: கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 37-வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். மாணவர் மன்ற தலைவர் வர்ஷினி வரவேற்றார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் சிவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.

பாரதியார் பல்கலை கழகப்பதிவாளர் (பொ) முனைவர் ரூபா குணசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் கல்வி, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், விளையாட்டு மற்றும் பல்வேறு மன்றங்களில் சிறந்து விளங்கிய 90 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இளநிலை பட்டப்படிப்பில் சிறந்த மாணவராக கார்த்திபன், முதுநிலை பட்டப்படிப்பில் சிறந்த மாணவராக கரண் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர் மன்ற துணைத்தலைவர் நிதேஷ் கிருஷ்ணா நன்றி கூறினார்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு