வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டில் மோதியது சென்னை துறைமுகத்துக்கு சென்ற கன்டெய்னர் லாரி விபத்தில் சிக்கியது

வேலூர், ஏப்.17: வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டு மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், சென்னை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெனரேட்டர்கள் சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கண்டெய்னர் லாரியில் ஜென்செட்கள் (ஜெனரேட்டர்கள்) ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை புறப்பட்டது. காலை 7.30 மணியளவில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே லாரி சென்று கொண்டு இருந்தது.

அப்போது, முன்னால் சென்ற வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், அந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதாமல் இருக்க திருப்பியபோது நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டு மீது மோதியது. அப்போது, லாரியில் இருந்த ஜென்செட்கள் சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக வேறு வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இதையடுத்து கிரேன் மூலம் ஜென்செட்களை அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்