(வேலூர்)பள்ளி மாணவி கடத்தல்?

கே.வி.குப்பம், மே 3: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாகல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இதனால் அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரை யாராவது கடத்திச்சென்றார்களா என்று தெரியவில்லை. இதுகுறித்து நேற்று கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் அவரது தாய் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் கே.வி.குப்பம் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமி குறித்து தேடி வருகின்றார்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது