வேலாயுதம்பாளையம் அருகே மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

 

வேலாயுதம்பாளையம், மார்ச் 27: கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே காந்தி நகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நெடுகிலும் மின்கம்பம் நடப்பட்டு அந்த கம்பத்தில் மின் கம்பிகள் பொருத்தப்பட்டது. அந்த பகுதியில் இருந்த ஒரு மின் கம்பத்தில் மின் இணைப்பு பாக்ஸ் வைக்கப்பட்டு அதிலிருந்து அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மின் கம்பத்தில் இருந்த பாக்ஸில் திடீர் அதிக மின் அழுத்தம் காரணமாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதைப் பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக புகலூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.

அதன் காரணமாக உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று அன்கம்பத்தில் இருந்த பாக்சில் இருந்து கொண்டிருந்த தீயை கெமிக்கல் பவுடர் மூலம் அணைத்து கட்டுப்படுத்தினர்.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி