வேலவன் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

தூத்துக்குடி, ஏப். 10: தூத்துக்குடி வேலவன் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியின் 3வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஆனந்த், தொழிலதிபர் தங்கவேலு ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கலந்து கொண்டு பேசினார். மேலும் கடந்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். பூமியின் அற்புதங்கள் என்ற தலைப்பில் பள்ளி மாணவ- மாணவிகள், நடனம் மற்றும் நாடகம் நடத்தினர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஷகிலா தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு