திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு

திருச்செந்தூர், ஏப். 10: போக்குவரத்து போலீஸ் சார்பில் திருச்செந்தூரில் தண்ணீர் பந்தலை டிஎஸ்பி வசந்தராஜ் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து போலீஸ் சார்பில் தண்ணீர் பந்தல் திறந்திட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருச்செந்தூர் உட்கோட்ட போக்குவரத்து போலீசார் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. திருச்செந்தூர் மெயின் ஆர்ச்சில் நடந்த விழாவிற்கு டிஎஸ்பி வசந்தராஜ் தலைமை வகித்து, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து எஸ்ஐக்கள் கணேசமணிகண்டன், வேல்முருகன், போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு