வேங்கம்பட்டி அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்

மல்லூர், மார்ச் 1: மல்லூர் பேரூராட்சி வேங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ₹30 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் வேங்கை அய்யனார் முன்னிலையில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் சங்கர், நகர செயலாளர் நவ்யா ரவிக்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் பிரபுகண்ணன், கவுன்சிலர் விஸ்வநாதன், தவமணி, செல்வாம்பாள், மாவட்ட பிரதிநிதி சந்திரன், பழனியப்பன், பள்ளி தலைமை ஆசிரியை மேனகா தமிழ்மணி, சத்துணவு அமைப்பாளர் மைதிலி, ஒப்பந்ததாரர் ஜேம்ஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்